பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு நீதிபதி பிரியசாத் டெப் தலைமையினால மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும், சரத் என். சில்வாவின் மனுவுக்கு விளக்கம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு கோரி குறித்த மனுவுக்கு எதிராக இரு மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவையும் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)