முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கட்டணம் செலுத்தும் வார்டுக்கு மாற்றம்

(FASTNEWS | COLOMBO) – விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று(04) காலை தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளது பாதுகாப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.