முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

கல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினரான விராஜ்பெஸ்டியனின் வீட்டின் மீதே இவ்வாறு கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.15 அளவிலே இந்தத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உறுப்பினரும் அவரது குடும்பத்தாரும் வீட்டினுள்ளே இருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதலால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.