முன்னாள் பிரதமரின் சலவை கணக்கு ஆறு லட்சம் – ஹர்ஷ

முன்னாள் பிரதமர் டி. எம் ஜயரட்னவின் சலவை கணக்கு ஆறு லட்சத்தையும் தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கான கணக்கு பட்டியல் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டதாகவும், இக்கணக்கு 2014ம் ஆண்டுக்கான இறுதி மூன்று மாதங்களுக்கானதாகவும்,

நவம்பரில் 25 சதவீதம் அதற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும்  ஹர்சா டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரின் மொத்த சலவைக் கணக்கு ரூ. 632.575 எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

(riz)