முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமசந்திரவுக்கு கடுமையான வேலைகளுடன் நான்காண்டு சிறை தண்டனை விதித்து, இன்று(02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த இத்தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு அம்பாறை பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் 50,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.