முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன, நவம்பர் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Updated Time 10.45————————————————————————————————–
பிடியாணை அடிப்படையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்றின் மூலம் ஒருவரை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு பிடி யாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலை சரத்குமார குணரத்ன, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார்.