முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அவரது மனைவி, மகன் உள்ளிட்ட ஏனைய ஐவருக்கு எதிராக குறித்த இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(19) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த வழக்கில் மனைவி மற்றும் ஐவருக்கும் 50 000 ரூபா ரொக்கப்பிணை, 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நிபுன ராமநாயக்க என்ற 21 வயதுடைய மாணவன் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய குறித்த வழக்கின் விசாரணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 6, 7, 8ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.