(FASTNEWS|COLOMBO) – காலி மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறியிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 இலட்சம் ரூபா சரீரி பிணை வழங்கி விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அவர் 2007ம் ஆண்டு மாத்தளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது, பாதுகாப்பு ஊழியர்கள் நால்வர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரை கடமை நேரத்தில் தனிப்பட்ட வேலைக்காக அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
——————————————————————————————————————-(UPDATE)
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை
(FASTNEWS|COLOMBO) – காலி மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறியிற்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிதி மோசடி தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த அதேவேளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.