முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் உட்பட 9 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர உள்ளிட்ட ஒன்பது பேர் நாளை(23) பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாக உள்ளனர்.

நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு பசில் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகின்றது.

‘கம நெகும’ முதலீட்டு திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி குறித்து இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஒன்பது பேருக்கும் நாளை சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.