முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை இன்று(22) முற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னர் சாட்சிகள் மாற்றப்பட்டமை, லசந்தவின் குறிப்புப் புத்தகம் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவகாரம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வட்டாரத்து தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.