முன்னாள் ஹோமாகம பிரதேச சபைத் தலைவர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரலகே இன்று (03) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இன்று காலை 9 மணிக்கு அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திலேயே அவர் சரணடைந்துள்ளார்.

நேற்று இரவு ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்