வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க தன்னை பிணையில் விடுவிக்க கோரி உயர்நீதி மன்றில் பிணை மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிஉள்ளிட்டவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கொலை வழக்கில் தான் உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டு எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்து சிறையில்அடைத்துள்ளதாகவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தனக்கு பிணை வழங்க வேண்டாம் என கொழும்பு பிரதான நீதவான் இட்ட உத்தரவானது சட்டத்திற்கு முரண்பட்ட விடயம் என்றும் அவரது மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பு பிரதான நீதிவானின் உத்தரவை செல்லுபடியற்றதாக்கி தனக்கு உயர்நீதிமன்றம் பிணை வழங்க வேண்டும் எனவும் அநுர சேனநாயக்க கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.