முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் விளக்கமறியலை ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதிவரை நீடிப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்ற நீதிபதி இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.