முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்பட்சத்தில் கடினமான நடவடிக்கை..

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) முன் அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவமனை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என அண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால் நாட்டின் மருத்துவ சேவை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்பட்சத்தில் அதற்கு எதிரான மக்களின் நிலைப்பாடுகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முகம்கொடுக்க நேரிடும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)