மும்பை அணியின் வீரர்களையே குற்றம் சொல்லுவேன் – மஹேல…

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும் ஏமாற்றமடைந்ததாக மும்பை அணியின் பயிற்சியாளரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட மும்பை அணியானது, தற்போது வரை விளையாடியுள்ள போட்டிகளில் 01 வெற்றி 05 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனி வரும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியின் பிளே ஆப் சுற்றை நினைத்து கூட பார்க்க முடியும்.

இந்நிலையில், இது குறித்து ஜெயவர்தனே கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ஹைதராபாத் அணி நிர்ணயித்த எளிய ஓட்டங்களை கூட எட்ட முடியவில்லை என்ற போது மிகவும் ஏமாற்றமடைந்தேன், இதில் துடுப்பாட்ட வீரர்களையே நான் குற்றம் சொல்வேன். அதுமட்டுமின்றி அணியில் இருக்கும் இளம் வீரர்கள் ஹார்திக் பாண்ட்யா உட்பட அனைவரும் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அப்போது தான் ஒரு நிலையான கிரிக்கெட் வீரராக உருவாக முடியும்..” எனக் கூறியுள்ளார்.

 

Rishma