மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றது..

இந்தியன் பீரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இரண்டாவது அணிக்கான போட்டி இன்று(19) இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் வெற்றிபெறும் அணி, ரைஸிங் பூனே சுப்பர்ஜியண்ட் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.

இறுதிப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

(rizmira)