பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாரஹென்பிட்டி அபயாராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அனந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
சில தினங்களாக எனக்கு தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது.
அவசியமற்ற அழைப்புக்களின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது.
இந்த எந்தவொரு தொலைபேசி அழைப்பு கொலை மிரட்டல்களுக்கும் நான் அஞ்சப் போவதில்லை.
பௌத்த பிக்கு என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.
கொலை மிரட்டல் விடுக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் விடுக்கப்பட்ட இலக்கங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.