முத்தையா முரளிதரனினது இறுதி டெஸ்ட் போட்டியின் போது முத்தையாவிற்கு ஒத்துழைப்பாய் இருந்தது போன்று டில்ஷான் இனது இறுதி இருபதுக்கு20 போட்டியில் தான் விளையாட எண்ணியுள்ளதாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இந்தியாவில் நடைபெற்ற இருபதுக்கு20 உலக்கிண்ண போட்டிகளில் பெப்ரவரி 25ம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இற்கு எதிராக ஆடிய போட்டியின் போது முழங்கால் உபாதைக்குள்ளாகி இருபதுக்கு20 போட்டிகளில் இருந்து விலகிய மலிங்க போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை.
குறித்த உபாதைக்கு பிற்பாடு எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத லசித் மலிங்க உபாதையினை கருத்திற் கொள்ளாது மீளவும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்னும், சங்கா, மஹேல ஆகியோர் நல்லமுறையில் பிரியாவிடை பெற்று சென்றனர். அவ்வாறே தில்ஷானும் பிரியாவிடை பெற வேண்டும் என தான் விரும்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
“2010ம் ஆண்டு முரளி அண்ணன் தனது இறுதி டெஸ்ட் போட்டியின் போது தனக்கு கூறியதாவது; ‘மாலி போட்டியில் ஆடுவோம்..’ நானும், ‘ஆடலாமே’ எனத் தெரிவித்தேன். நான் அப்போது சுமார் 2 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. என்றாலும், முரளி அண்ணா மீதுள்ள மரியாதை காரணமாக அப்போட்டியில் பங்கேற்று வெற்றியினை ஈட்டினோம். அதேபோன்று, டில்ஷான் இற்காகவும் அணியில் இணைந்து வெற்றியுடன் அவரை வழியனுப்ப தான் எண்ணியுள்ளேன். ஆனால் தேர்வுக்குழுவின் பின்னால் என்னை தேர்வு செய்யுமாறு வழியமாட்டேன்.” எனத் தெரிவித்துள்ள மலிங்க, தான் பின்னர் பற்றி தற்போதே திட்டமிட மாட்டேன் நடப்பவை நடக்கட்டும் என கூறியிருந்தார்.