மத்திய வங்கியின் முறிகள் விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு..

மத்திய வங்கியின் பிணை முறி விவகார மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் நாளை(21) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(20) பிற்பகல் 1:00 மணிக்கு பாராளுமன்றம் கூடிய நிலையில், குறித்த அறிக்கைகளுக்கான பிரதிகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கம் இல்லாமையால் குறித்த விவாதம் நாளை(21) 1:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

……………………………………………………………………………………………… UPDATE

முறிகள் விவகாரம் – ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று…

முறிகள் விவகார மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் இன்று(20) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(20) பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இரண்டாம் நாள் விவாதமாகவே, இன்றைய தின விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பிலும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.