UPDATE – முறி ஏலத்தினை கண்காணிக்க மத்திய வங்கியில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர்…

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(01) காலை மத்திய வங்கியில் திறைச்சேரியின் ரூபாய் 24,000 மில்லியன் பெறுமதியான முறிகள் ஏலத்தில் விடப்படுகின்றன.

இதனை கண்காணிக்கவே குறித்த அந்த ஆணைக்குழு அங்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

————————————— Update – Wednesday, March 1, 2017 9.00 am

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் நாளை(01) இடம்பெறவுள்ள முறி விநியோகத்தை கண்காணிப்பதற்காக சர்ச்சைக்குரிய முறி விநியோகம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் , நாளைய தினத்தில் அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்திய வங்கிக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.