முல்லைத்தீவு கடற்பரப்பில் மீண்டும் மாற்றம் – சுனாமியின் அறிகுறியா..?

முல்லைத்தீவு கடற்பரப்பில் நேற்று(05) நிலவிய மாற்றம் தொடர்பில் கலந்தாலோசித்து சமய வழிபாடுகளில் ஈடுபட முல்லைத்தீவு மக்கள் இன்று(06) கடற்கரையோரத்தில் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்றுமே இல்லாதவாறு கடல் மிக குளிர்ச்சியுடன் காணப்படுவதாகவும், அலைகள் அதிகளவு மேல் எழுவதாகவும் குறித்த மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும், தமது பாதுகாப்பு குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் அம்மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் குறித்த கடற் பரப்பின் அசாதாரண சூழ்நிலை காரணமாக சுனாமி பயம் ஆட்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma