முல்லைத்தீவு விசுவமடுவில் இரு பெண்களைக் கூட்டுப் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திய படையினரின் விசாரணைகள் முடிவடைந்தன

விசு­வ­மடு பகு­தியில் ஒரு பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்­லு­றவு புரிந்­த­துடன், மற்­று­மொரு பெண்ணைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக நான்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராகக் குற்றம் சுமத்­தப்­பட்ட வழக்கு விசா­ர­ணைகள் முடி­வுக்கு வந்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து இந்த வழக்­கிற்­கான தீர்ப்பை யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் ஒக்­டோபர் 7 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக சட்­டமா அதி­ப­ரினால் நான்கு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்தி வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற இந்த வழக்கில் பாதிப்­புக்­குள்­ளா­கிய பெண்கள், பொலிஸ் அதி­கா­ரிகள், இரா­ணுவ பொலிஸ் அதி­கா­ரிகள், மருத்­துவ பரி­சோ­தனை நடத்­திய வைத்­திய அதி­காரி உள்­ளிட்ட பலர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்கள்.

வழக்குத் தொடுநர் சாட்­சி­யங்கள் மற்றும் எதிரி தரப்பு சாட்­சி­யங்கள் என்­பன முடி­வு­றுத்­தப்­பட்டு,  திங்­க­ளன்று இரு தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளி­னதும் தொகுப்­பு­ரைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.  எதி­ரி­க­ளான இரா­ணு­வத்­தினர் தரப்பில் சட்­டத்­த­ரணி அசேல டி சில்வா தொகுப்­புரை வழங்­கினார். அரச தரப்­பி­லான தொகுப்­பு­ரையை அரச தரப்பு சட்­டத்­த­ரணி சுகந்தி கந்­த­சாமி வழங்­கினார்.

இதன்­போது, நான்­கா­வது சிப்பாய் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கி­யி­ருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து, அவரைக் கைது செய்ய பொலிஸ் மா அதிபர் ஊடாக நீதி­பதி இளஞ்­செ­ழியன் பிடி­வி­றாந்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்துடன் இந்த வழக்கிற்கான தீர்ப்பு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.