வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தங்கும் விடுதியில் இருந்து கோமா நிலையில் மீட்க்கப்பட்ட வைத்தியர் ஒருவர் கொழும்பில் இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு வைத்தியர் விடுதிக்குத் திரும்பிய மருத்துவரான வைத்தியகலாநிதி குணபாலசிங்கம் ஜீவதாசன் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் வைத்திய விடுதி அறையின் பூட்டை உடைத்து 32 மணி நேரம் கடந்த பின் கோமா நிலையில் வைத்தியசாலை ஊழியர்களால் மீட்க்கப்பட்டுள்ளார்.
மீட்க்கப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த வைத்தியர் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கொழும்பிலிருந்து வரும் சடலம் வவுனியா வைத்தியசாலையில் சுகாதார அதிகாரி பணிமனையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சொந்த ஊரான முள்ளியவளைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிய வருகிறது.