முழுமையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், சத்தியபிரமாணம் – கூட்டமைப்பு…

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வெளியிடப்பட்ட பின்னர், சத்தியபிரமாண நிகழ்வை நடத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று(17) சத்தியபிரமாணம் மேற்கொள்ள உள்ளதாக கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(17) காலை இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கட்சியின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட 98 உறுப்பினர்கள் இதன்போது சந்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.