நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.