இலங்கை வாழ் முஸ்லிம்களின் நன்மையை கருத்தில் கொண்டே தான் சிறையில் இருந்த போது சிறைச்சாலை உடையான ‘ஜம்பர்’ காற்சட்டையை அணிய இணங்கியதாக சமூக ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலின் போது பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தேரர்;
“.. நான் சிறைச்சாலைக்கு சென்ற போது எனது காவியுடையை அகற்ற முதலில் மறுப்பு தெரிவித்தேன். எனது மறுப்புக்கு மக்களும் ஆதரவு வழங்கினர். எனினும், வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியாக லாஹிர் என்ற முஸ்லிம் அதிகாரியே செயற்பட்டு வந்தார்.
எனது எதிர்ப்பையும் மீறி அந்த அதிகாரி சட்டத்தை நிறைவேற்றினால் ஒரு முஸ்லிம் அதிகாரி எனது காவியை களைந்ததாகவே சமூகத்தினால் பேசப்படும்.
அமைதியான முறையில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கை பாரதூரமான விளைவுகளை இட்டுச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
குறித்த இந்த விடயத்தை தூரநோக்குடன் சிந்தித்தே தான் பௌத்த காவியுடையை களைந்தேன். சிலர் எம்மீது சேறு பூச முனைகின்றனர்..”