முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை கண்டனத்திற்குரியது – அமேரிக்கா..

இலங்கையில் முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றமைக்கு உடனடியாக தீர்வொன்றினை இந்நல்லாட்சி அரசு வழங்கும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ட்விட்டர் பணிவிடை ஒன்றினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப், எந்தவொரு மத வழிபாட்டுத் தளமும் தாக்கப்படும் போது அதனை கண்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

நேற்று(21) குருநாகல் முஸ்லிம் பள்ளிவாயல்  ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளகியிருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தூதுவர் இது குறித்து கருத்து வெளியிட்டுருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)