அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமிற்கு வீசா வழங்குவதுதொடர்பில் கொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் தாமதித்து செயற்படுவதாக கொழும்புஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டார் நிதி அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே அவர் கட்டாரிற்குஉத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சருக்கு நெருக்கமானவட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் மூத்த அமைச்சருக்கு வீசா வழங்க தாமதித்தமைதொடர்பில் பல்வெறு கேள்விகள் எழுப்பப்பட்டள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஹில்டன் ஹோட்டல், ஹயட் ஹோட்டல், இலங்கை வங்கி, ஸ்ரீலங்காஇன்சூரன்ஸ், லங்கா வைத்தியசாலைகள் ஆகியன அமைச்சர் கபீர் ஹாசிமிற்கு கீழ்செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.