முஸ்லிம் மத நிகழ்வுகளை (ரமழான் நிகழ்வுகள்) சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது கவலை அளிப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மத நிகழ்வுகளை முன்வைத்து சிலர் பொருட்கள் விநியோகித்து அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதென கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் வன்முறைகள் குறித்து இதுவரை 261 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(riz)