முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை முற்றாக தீக்கிரை..

நாவலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலை ஒன்றில் நள்ளிரவு 12:45 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்குச் சொந்தமான “DONSIDE” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த தீ எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. நேற்று(08) விடுமுறை தினம் என்பதால் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)