முஸ்லிம் விவகாரம் தொடர்பான அமைச்சினை வேறு மதத்தவருக்கு வழங்குவது காலத்தின் தேவை..

(FASTGOSSIP | COLOMBO) – முஸ்லிம் விவகாரம் தொடர்பான அமைச்சரை உடனடியாக மாற்றி குறித்த அமைச்சிற்கு வேறு படித்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட தேவையில்லை, வேறு மதத்தவருக்கு வழங்கலாம் எனவும் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகமான ‘திவயின’ செய்திச் சேவைக்கு இது தொடர்பில் தெரிவிக்கையிலேயே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பில் தொடர்ந்து எங்களுக்கு தகவல் கிடைக்கின்றது. இந்நாள் முஸ்லிம் விவகாரம் தொடர்பிலான அமைச்சர் உரிய முறையில் இவற்றினை ஆராய்ந்து பார்ப்பதில்லை. இந்த விசாரணைகளில் சுயாதீன தன்மை ஒன்று அவசியம். அப்போது பிரச்சினை தீர்ந்துவிடும்.

முஸ்லிம் விவகாரம் தொடர்பான அமைச்சர்கள் செய்ய வேண்டிய விடயங்களை இராணுவம் மற்றும் பொலிஸார் செய்து கொண்டிருக்கின்றனர். உடனடியாக அமைச்சர் மாற்றப்பட வேண்டும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.