அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்றுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நியமிக்கப்படவுள்ள குழுவை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சட்ட திருத்தம் தொடர்பில் நீதியமைச்சல் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதுவரை குறித்த அமைச்சரவை குழுவை அகற்றுமாறும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.