(FASTNEWS | COLOMBO) – முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக, நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி, அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைஸர் முஸ்தபா ஆகியோர் அடங்குகின்றனர்.
முஸ்லிம் தனியார் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட குழுவொன்றை நியமித்ததோடு, இது தொடர்பில் இரு அறிக்கைகள் நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.