(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை – கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் முஸ்லிம் இளைஞர்களுக்கும் சிங்கள இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை முற்றியதால் நேற்று மாலை அங்கு பதற்றம் நிலவியது.
இந்த சம்பவத்தினால் 15 வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இனவாதத்துடன் தொடர்புடைய கீழ் தரமான அரசியல் இலாபம் கருதி இவ்வாறான தாக்குதல்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பளராக சஜித் தெரிவை அடுத்து கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் உள்ள இளைஞர்கள் மகிழ்ச்சி கொண்டாடத்தில் திழைத்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கிரிந்த பிரதேச சபை தவிசாளரின் பாதுகாவலருக்கும் பிரதேச முஸ்லிம் இளைஞர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், முஸ்லிம் இளைஞர் தன்னை தாக்கியதாக தெரிவித்து தவிசாளரின் பாதுகாவலர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞனை கைது செய்யுமாறு பிரதேச சபை தவிசாளரினால் பொலிஸார் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிலமை இவ்வாறு இருக்க வெற்று மதுபான போத்தல்கள் அங்குள்ள விகாரை வளவுக்குள் வீசப்பட்டுள்ளன.
இதனையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் மேதால் வெடித்தது. ஆனாலும் அங்குள்ள சிங்கள – முஸ்லிம் பெரியார்கள் அமைதி நடவடிக்கைகளை எடுத்தபடியால் நிலைமை சுமுகமாகியுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அரசியல் இலாபம் கருதி கடந்த சில வரங்களாக பல்வேறு பிரதேசங்களும் இவ்வாறான இன தாக்குதல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தவிசாளர் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.