கரும்புள்ளிகள் வரக் காரணம் சருமத்தில் உள்ள மயிர்க்கால்களில் ஏற்படும் அடைப்பே காரணமாகும். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளால் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெய்யும் சுற்றுப் புற மாசுக்களும் சேர்ந்து கரும்புள்ளிகளை உருவாக்குகிறது..
முட்டை வெள்ளை கரு மற்றும் தேன் மாஸ்க்:
தேவையான பொருட்கள்:
1 டேபிள் ஸ்பூன் தேன்
1 முட்டை
பயன்படுத்தும் முறை: முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் தேன் கலந்து நன்றாக அடித்து கொள்ளவும். இதை மூக்கில் 2-3 லேயர் வரை தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
முட்டையின் வெள்ளை கரு மற்றும் பேக்கிங் சோடா:
தேவையான பொருட்கள்:
1 முட்டை
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
பயன்படுத்தும் முறை: ஒரு பெளலில் பேக்கிங் சோடா, தண்ணீர் மற்றும் முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவி 5-8 நிமிடங்கள் மசாஜ் செய்து விடவும். 10 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவவும். தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளை கரு மற்றும் சர்க்கரை:
தேவையான பொருட்கள்:
2 முட்டைகள்
1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
பயன்படுத்தும் முறை: முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை மூக்கில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்
முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்:
தேவையான பொருட்கள்:
1 முட்டை
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை: ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு பெளலில் வைக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் கொண்டு அதை நன்றாக கலக்கவும். கரும்புள்ளிகள் இருக்கின்ற இடத்தில் இந்த பேஸ்ட்டை 2-3 லேயர் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். நல்ல பலன் கிடைக்கும்.