மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று(21) மீண்டும் ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று(21) மற்றும் நாளைய தினங்களில்(22) மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று(21) ஆரம்பிக்கப்படுவதுடன், ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இன்று(21) ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனிடையே, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் பொருளியல் பீடம் மற்றும் சட்டபீடம் என்பன இன்று(21) ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், கலை பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிகைக்ள நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் (23) திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்திய, சுகாதார, கால்நடை மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்கள் இன்று(21) ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் பீடம், மருத்துவ பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாயம் பீடத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கல்வி ஆண்டு மாணவர்களின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம்(22) அரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது

இதேவேளை, யாழ். பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.