நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளில் எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ” இனி மூடப்பட்டுள்ள பைல்களை திறக்க வேண்டிய காலம் ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இடம்பெறும் இம்முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்ச்சியாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியொருவர் சட்டத்தரணிகள் தலைமைப் பணிமனைக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.