(எஸ். சினீஸ் கான்)
மூதூர் அனர்த்த சமூகசேவைகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் கல்வி வலயத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் சிறந்த க. பொ. த. உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான விருதுகள் வழங்கும் கௌரவிப்பு விழா சனிக்கிழமை (30) நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்தகுமார் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கிண்ணியா, மூதூர் பிரதேச செயலாளர்கள் முகம்மது கணி, முன்னாள் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அரூஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



