(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான நாளைய(31) மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நுவான் குலசேகரவுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து நுவான் குலசேகர அண்மையில் தமது ஓய்வை அறிவித்திருந்த நிலையில் அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்றும் நாளைய(31) போட்டியின் போது இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2003ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான நுவான் குலசேகர, 2014ம் ஆண்டு இருபதுக்கு -20 சாம்பியனான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
எனினும் 2017ம் ஆண்டு சிம்பாபேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் பின்னர் அவர் இலங்கையில் எந்த போட்டிகளுக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.