ராஜிதவின் முன்பிணை மனுவை விசாரிக்க திகதி குறிப்பு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்பிணை மனு 3வது முறையாகவும் தாக்கல் ——————— UPDATE

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மூன்றாவது தடவையாகவும் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி இன்று(23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.