சுற்றுலா இங்கிலாந்து அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று(17) நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது பிற்பகல் 2.30 மணிக்கு இரவு/பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ளது.
தொடைப் பகுதியில் உபாதைக்கு உள்ளாகியுள்ள குசல் ஜனித் பெரேரா குறித்த போட்டியில் விளையாட மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக குசல் மென்டிஸ் அணிக்கு உட்சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறே, உபாதைக்கு உள்ளாகியுள்ள இங்கிலாந்து அணியின் சுழற் பந்து வீச்சாளர் லியம் டொவ்சன் இற்கு பதிலாக டொம் கரன் அல்லது சேம் கரன் அணிக்கு உள்வாங்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, இன்றைய(17) போட்டிக்காக அணி வீரர்களை க்ரிக் இன்போ இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இலங்கை (விளயாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்): 1.உபுல் தரங்க, 2. நிரோஷன் திக்வெல்லை (wk), 3.குசல் மென்டிஸ் , 4.தினேஷ் சந்திமால் (capt), 5தனஞ்சய டி சில்வா, 6.தசுன் ஷானக , 7.திசர பெரேரா, 8.அகில தனஞ்சய, 9.லக்ஷான் சந்தகென், 10.லசித் மாலிங்க, 11.நுவன் பிரதீப்
இங்கிலாந்து (விளயாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள்): 1.ஜேசன் ரோய், 2.ஜோனி ப்ரிஸ்ட்ரோ, 3.ஜோய் ரூட், 4.இயன் மோர்கன் (capt), 5.பென் ஸ்டோக், 6.ஜோஸ் பட்லர்(wk), 7.மொயின் அலி, 8.க்றிஸ் வோக்ஸ், 9.சேம் கரன்/டொம் கரன், 10ஆதில் ரஷீத், 11.ஒழி ஸ்டோன்