மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசுக்கு வழங்கிய கடிதத்திற்கு அரசிடமிருந்து பதில்..

மாலபே, சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாட ஆயத்தமாக உள்ளதாக உயர் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

சைட்டம் சர்ச்சைக்கு நீதிமன்றினை நாடியதாகவும், இறுதித் தீர்மானத்தினை வழங்க வேண்டியது நீதிமன்றம் எனவும் தெரிவித்துள்ளார்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் சகல தரப்பையும் கூட்டி பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் தீர்வொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட தம்மதஸ்ஸாபிதான, அமரபுர மகாநாயக்கர் கொடுகொட ஸ்ரீ தம்மாவாசாபிதான ஆகியோரே குறித்த இந்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)