வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகள் மற்றும் ஆளணித் தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும், மருத்துவ துறையில் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கும்
தீர்வு காண உடன் நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.
கொழும்பில் சுகாதார அமைச்சின் தலைமையகமான சுவசிரிபாயவில் குறித்த இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.