எதிர்வரும் 05ம் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீசல் மற்றும் பெட்ரோல் விலையை புதுப்பிக்கும் வகையில், நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எரிபொருள் விலைகளை புதுப்பிப்பதற்கு திறைசேரி மற்றும் பெட்ரோலியம் வளத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலைக்கான சூத்திரம் 2018 மே மாதம் 11ம் திகதி முதல் அமுலுக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னர் உள்ள இரு மாதங்களுக்கான எரிபொருள் விலையினை கருத்திற் கொண்டு மூன்றாம் மாதம் எரிபொருளின் விலை தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.