(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றுடன் கொஹுவல, பேலியகொட, வெதமுல்ல ஆகிய விசேட அதிரடிப்படையினரின் முகாம்களிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று முகாம்களும் (STF) முடக்கப்பட்டுள்ளன.
குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலியகொடையில் இருந்து மீன் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலமே கொரோனா தொற்று முகாம்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிரிஹான மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்திருந்தார்.