மூளைக்காய்ச்சல் நோய்க்கு ஆப்ரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்காவில் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை அபார வெற்றி பெற்றுள்ளது என சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காம்பியா முதல் எத்தியோப்பியா வரை உள்ள 16 நாடுகளில் மெனின்ஜைட்டிஸ்-ஏ எனும் மூளைக்காய்ச்சல் நோய்க்கெதிராக 2010-ம் ஆண்டு முதல் இதுவரை, 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்னும், கடந்த 2013-ம் ஆண்டு அந்தப் பகுதி முழுவதிலும் மொத்தமாக நான்கு பேருக்கு மட்டுமே மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

ஒரு காலத்தில் ஆபிரிக்காவின் மேற்கு தொடங்கி கிழக்கு வரையிலான அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் தற்போது அங்கு மூளைக்காய்ச்சல் மரணங்களே ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.