மூவருக்கு அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும், உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதோடு, வௌிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக, மனுஷ நாணயக்கார ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.