மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்மாத ஆரம்பத்தில்  8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.