மெக்சிகோவில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்…

மெக்சிகோவில் இன்று(17) 7.2 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.