மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.  இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் இந் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதேவேளை உயிரிழந்தோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்டுகின்றன